Posts

Showing posts from August, 2012

மென்தமிழ் - தமிழ்ச்சொல்லாளர்

மென்தமிழ் - தமிழ்ச்சொல்லாளர் தற்போது முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டு, 3 வது பதிப்பு வெளிவந்துள்ளது.சொற்திருத்தி, சந்திப்பிழைதிருத்தி, அகராதி போன்றவை முற்றிலும் புதிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பல புதிய வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதைக் கீழ்க்கண்ட இணையதளத்தில்  தரவிறக்கம் செய்து, 15 நாட்களுக்குக் கட்டணமின்றி, பயன்படுத்திப் பார்க்கலாம். www.lingsoftsolutions.com பயன்படுத்திப் பார்த்துவிட்டு, மேலும் செழுமைப்படுத்துவதற்குத் தங்கள் கருத்துரைகளை வழங்க  பேராசிரியர்  திரு ந. தெய்வ சுந்தரம் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடவுச்சொற்கள் அனைத்தையும் சேமித்து வைத்துக் கொள்ள மென்பொருள்

இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவரும் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்னஞ்சல்களை பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு மின்னஞ்சல் கணக்கிருக்கும் வெவ்வேறான கடவுச் சொல் கொடுத்து இருப்பதால் அதை அனைத்தையும் ஞாபகம் வைத்துக் கொள்வது என்பது இயலாத காரியம். இச்சூழ்நிலையில் உங்களது கடவுச்சொல்லை ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்கு ஒரு சிறிய மென்பொருள் உதவி புரிகிறது. இதில் உங்களது அனைத்து கடவுச் சொல்லையும் சேமித்து வைத்து இவை அனைத்திற்கும் சேர்த்து ஒரே ஒரு கடவுச்சொல் கொடுத்து கொள்ளலாம். அதை மட்டும் ஞாபகம் வைத்துக் கொண்டால் போதும். மென்பொருளின் சிறப்பம்சங்கள்: 1. எந்தவொரு நபரும் உங்களது கடவுச் சொல்லை திருடாத படி கடினமான கடவுச்சொல் இந்த மென்பொருள் மூலம் உருவாக்கலாம். 2. குறிப்பிட்ட ஒரு கோப்பை ஒட்டுமொத்த கடவுச் சொல்லாக தெரிவு செய்யும் வசதி. 3. மின்னஞ்சல், இயங்குதளம் மற்றும் இணையம் என அனைத்திற்கும் தனித் தனியான கடவுச் சொல் கொடுத்து சேமித்து வைத்துக் கொள்ளும் வசதி. 4. Potable மென்பொருள் என்பதால் கணணியில் நிறுவி செய்ய வேண்டிய அவசியமும் இல்லை மற்றும் ஏராளமான வசதிகள் உள்ளது. இதற்கு முதலில் இந்த மென்ப...

திருக்குறளும் அரிய தகவல்களும்

Image
* திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பெற்ற ஆண்டு - 1812 * திருக்குறளின் முதல் பெயர் - முப்பால் * திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் - 133 * திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்- 380 * திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் - 700 * திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் - 250 * திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள் - 1330 * திருக்குறளில் உள்ள சொற்கள் - 14,000 * திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துகள் - 42,194 * திருக்குறளில் தமிழ் எழுத்துகள் 247-இல், 37 எழுத்துகள் மட்டும் இடம்பெறவில்லை. * திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள் - அனிச்சம், குவளை * திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் - நெருஞ்சிப்பழம் * திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை - குன்றிமணி * திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து - ஒü * திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் - குறிப்பறிதல் * திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் - பனை, மூங்கில் * திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரே எழுத்து - னி ...

தமிழக அரசின் இணையதளம் : புதிய அறிவிப்பு

முதலமைச்சர் ஜெயலலிதா 110-வது விதியின் கீழ் சட்டசபையில் வெளியிட்ட அறிக்கையில், ’’தகவல் தொழில் நுட்பவியலில், இந்தியாவில் முன்னணியில் உள்ள மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்வதற்கு, 2002-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தகவல் தொழில்நுட்பக் கொள்கை தான் அடிப்படைக் காரணமாக விளங்குகிறது. அரசுத் துறைகள் பல்வேறு சேவைகளை மக்களுக்கு இணையம் மூலம் வழங்கி வருகின்றன. இந்த இணைய சேவைகள் அனைத்தும் தற்போது அந்தந்தத் துறைகளின் வலைத் தளங்களின் மூலம் அளிக்கப்படுகின்றன. பல்வேறு சேவைகளுக்கான இணையதள முகவரிகளை பொதுமக்கள் நினைவில் வைத்துக் கொள்வது கடினமானது ஆகும். இதனைத் தீர்க்கும் வகையில், அரசின் அனைத்து சேவைகள் பற்றிய விவரங்கள் அடங்கிய சேவை விளக்கக் கோப்பகம், ஒன்று தமிழக அரசின் இணையதளத்தில் வெளியிடப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சேவை விளக்கக் கோப்பகத்தில் இணையதள சேவை, இணைய தள முகவரி, சேவை தொடர்பான இணைப்புகள், உபயோகிப் போர் விளக்க வழிகாட்டி, மற்றும் சேவையின் நிலை, குறித்த தகவல் போன்ற விவரங்கள் இடம்பெறும். இதன் மூலம் பொதுமக்கள் அரசின் சேவைகளை பெற அரசு அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டி...

தமிழ் டிஜிட்டல் நூலக திட்டம்:ஏழு ஆண்டுகளாக கிடப்பில் கணினி தமிழ்

கடந்த 2005ம் ஆண்டு, முதல்வர் ஜெயலலிதாஅறிவித்த தமிழ் டிஜிட்டல் நூலக திட்டம், ஏழு ஆண்டுகளாகியும், இன்னும்கிடப்பிலேயே உள்ளது. இதற்கு உதவ பல தரப்பினர் முன்வந்தும், டிஜிட்டல் நூலகத்தைஉருவாக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. டிஜிட்டல் நூலகத்திற்கான விரிவானதிட்டத்தை, ஓய்வுபெற்ற நூலகரும், "அன்பு பாலம்' அமைப்பின்நிறுவனருமான கல்யாணசுந்தரம்,கடந்த 2003ம் ஆண்டு அரசிடம் கொடுத்தார். பரிசீலனை : இது குறித்து, கல்யாணசுந்தரம்கூறுகையில், ""கடந்த 2003ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய, முன்னாள் ஜனாதிபதிஅப்துல் கலாம், தமிழை சர்வதேச மொழியாக்க வேண்டுமானால், உலகத்தின்அனைத்துத் தகவல்களையும், கணினி தமிழுக்கு மாற்ற வேண்டும் என, குறிப்பிட்டார். கலாமின் இந்தவேண்டுகோள் என்னை பெரிதும் ஈர்த்தது,'' என்றார். மேலும், ""தமிழை கணினிமொழியாக மாற்ற, டிஜிட்டல் நூலகத்தை உருவாக்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பல அரசு துறை அதிகாரிகளையும், தொழில் அதிபர்களையும் அணுகினேன்,'' என்றார். இந்த முயற்சிகளை அடுத்து, 2005ம் ஆண்டு, இதற்கான அறிவிப்பைமுதல்வர் ...

நூறு சதவிகித தேர்ச்சியா? 35 % தேர்ச்சியா? எது நல்லது?

கடையில் பொருள் வாங்கும் பொழுது கலப்படம் உள்ள குறையுள்ள ஒரு பொருளை விலை கொடுத்து வாங்குவதில்லை. அதே போல் அரைகுறையாகக் கட்டப்பட்ட வீடு அரைகுறையாகத் தைக்கப்பட்ட உடை இப்படி எதையுமே நாம் ஏற்பது இல்லை. ஆனால் ஒரு மாணவனின் கல்வித் தரத்தை நிர்ணயம் செய்ய 35 % போதும் என்கிறோம். ஆக முழுமை பெறாத கல்வித் தரத்துடன் பட்டம் பெற்று மாணவர்கள் வெளி வருகின்றனர் என்பது தானே உண்மை. ௧. எந்த ஒரு சமூக மாற்றமும் புரட்சியும் வகுப்பறைகளிலிருந்தே தோன்றும் என்பர். அத்தகைய முதன்மை நிறுவனத்தில் முழுமை பெறாத கல்வியை கற்று மாணவர்கள் குறையான தரத்துடன் வெளிவரல் நன்மையானதா? ௨. ஒரு குழந்தை ஒரு வயதிற்குள்ளாகவே பேசும் , சில குழந்தை இரண்டு வயது வரை கூட பேசாமல் இருக்கும். ஆனால் இன்று வகுப்பறைகளில் எதிர்பார்க்கப் படுவது என்ன? ஐந்து வயதிற்குள்ளாக இரு குழந்தைகளும் சம அளவில் அனைத்துத் திறனும் பெறவேண்டும், என்பதே. ௩. உடல் மன வளர்ச்சியில் ஏற்றத்தாழ்வுடன் இருக்கும் வகுப்பில் உள்ள 50 குழந்தையும் ஒரே மாதிரியான தேர்ச்சி பெற வேண்டும் என்றும் அப்படி பெறவில்லை என்றால் திறனற்ற குழந்தை என்றும் ஒதுக்கும் நிலை தமிழகக் கல்வி நிலையங்களில் ...

கிராமப்புறங்களில் பி.பி.ஓ., மையங்கள்

கிராமப்புறங்களில் பி.பி.ஓ., மையங்கள் துவங்கினால், முதலீடு, பயிற்சி உள்ளிட்டவற்றில் மானியம், போக்குவரத்து வசதி ஆகியவை ஏற்படுத்தி தரப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின், கடந்த 2011-12 நிதியாண்டிற்கான நிதி நிலை அறிக்கையில், தொழில் முனைவோர், கிராமப்புறங்களில் தங்கள் பி.பி.ஓ., மையங்களை அமைப்பது தொடர்பாக, பி.பி.ஓ., கொள்கை மாற்றியமைக்கப்படும் என அறிவிக்கப் பட்டிருந்தது. இதன்படி, மேம்படுத்தப்பட்ட கிராமப்புற பி.பி.ஓ., கொள்கை வெளியிடப் பட்டுள்ளது. வெளிநாடுகளில் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்கள், அமைப்புகளின் நடவடிக்கைகளுக்கான சேவைகள், பெரும்பாலும், இந்தியாவில் உள்ள பி.பி.ஓ., நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப் படுகின்றன. இந்த நிறுவனங்கள் அனைத்தும், வர்த்தகம் சார்ந்த முக்கிய பகுதிகளையே நோக்கி அமைந்துள்ளன. இப்பிரிவு மேலும் வளர, கிராமப் புறங்களில் இதற்கான சூழலை, அரசு ஏற்படுத்தித் தர வேண்டியது அவசியமாகிறது. இதற்கென மேம்படுத்தப்பட்ட கிராமப்புற பி.பி.ஓ., கொள்கை-2012 உருவாக்கப் பட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளில், பி.பி.ஓ., மையங்கள் அமைக்கும் தொழில் முனைவோரை ஊக்குவி...

தமிழ் 99' எழுத்துரு மற்றும் விசைப் பலகைகையாள்வதில் தேர்ச்சி பெற்றவர் என,சான்று அளிக்கும் புதிய முறை

"தமிழ் 99 அடிப்படை தகுதியாக்கப்படும்'’ இணைய பல்கலைஇயக்குனர் நக்கீரன் பேட்டி தமிழ் தட்டச்சுக்கு தேர்வு நடத்தி, சான்றிதழ் அளிப்பதுபோல், தமிழ் கணினியில் "தமிழ் 99' எழுத்துரு மற்றும் விசைப் பலகைகையாள்வதில் தேர்ச்சி பெற்றவர் என,சான்று அளிக்கும் புதிய முறையை அமல்செய்ய, தமிழ் இணைய பல்கலைக் கழகம் நடவடிக்கை எடுத்து உள்ளது. கணினி தமிழில் பொதுவான விசைப் பலகையாக, தமிழக அரசுஉருவாக்கி உள்ள "தமிழ் 99'முறையை அறிவிக்க வேண்டும் எனவலியுறுத்தி, "தினமலர்' நாளிதழில் கட்டுரைகள் வெளியிடப் பட்டன. இதை அடுத்து, எடுக்கப் பட்டநடவடிக்கைகள் குறித்து, தமிழ் இணைய பல்கலையின் இயக்குனர் நக்கீரன் அளித்த பேட்டி:"அரசுத் துறைகளில் "தமிழ் 99' விøŒப் பலகை முறையை பயன்படுத்த வேண்டும்' என, அரசாணைவெளியிட்டுள்ள நிலையிலும், "தமிழ் 99' பயன்பாடு மிகக் குறைவான அளவிலேயே உள்ளது. இதற்கு, அரசு ஊழியர்களுக்கு"தமிழ் 99' பயன்படுத்துவதில் அனுபவம் இல்லை என, எழுந்துள்ள குறைபாட்டை தொடர்ந்து, "தமிழ் 99' பயிற்சி அளிக்கும்நடவடிக்கையை எடுத்து உள்ளோம். இதற்காக, தமிழ...

தமிழ் மொழி அமைப்பை, கணினி புரிந்துகொள்ள வேண்டும்

தினமலர் – சென்னை –வெள்ளி 3-8-2012  - பக்கம் 2 தொடரும் வெட்டிப்பேச்சு , பின்தங்கும் தமிழன் ! கணினி தமிழ் அடுத்தகட்டத்துக்கு சொல்லுமா? ( நமது நிருபர்) கணினி மொழித் துறையில், உலகின் பல மொழிகள்ஏற்றம் பெற்று வருகின்றன. பல நாடுகளில், கணினி, அலைபேசி மற்றும் மின்னணு சாதனங்களைப்பயன்படுத்த, ஆங்கிலம் தெரிய வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.இதனால், அந்த நாட்டு மக்கள், தொழில் ரீதியாகவும், கலை ரீதியாகவும்பெரிதும் பயன்பட்டு வருகின்றனர். ஆனால், தமிழன் மட்டும், ஆங்கிலம் படித்தால்மட்டுமே சம்பாதிக்க முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான். இதற்கு முக்கியகாரணம், கணினி தமிழ் வளராதது தான். இந்தத் துறையில், பொதுவான விசைப்பலகையைக் கூட நம்மால் உருவாக்க முடியவில்லை. இதனால், அரசு கொடுக்கும் இலவச மடிக்கணினிகளும், தமிழ்பொறிக்கப்படாத விசைப் பலகைகளோடு வழங்கப்படும் அவலம் நடக்கிறது. கணினி தமிழின் வளர்ச்சிப் பாதைமற்றும் வேகமாக வளர வேண்டியதன் அவசியம் குறித்து, சென்னை பல்கலையின், முன்னாள் தமிழ்த்துறைத் தலைவரும், தமிழ் மென்பொருள் உற்பத்தியாளருமான தெய்வசுந்தரம், "தினமலர்' நாளிதழுக்கு அளித...

தமிழின் சிறப்பு வரிவடிவங்களுக்கான ஒருங்குறி .

New in 4.0 0BF3 ௳ TAMIL DAY SIGN 0BF4 ௴ TAMIL MONTH SIGN 0BF5 ௵ TAMIL YEAR SIGN 0BF6 ௶ TAMIL DEBIT SIGN 0BF7 ௷ TAMIL CREDIT SIGN 0BF8 ௸ TAMIL AS ABOVE SIGN 0BF9 ௹ TAMIL RUPEE SIGN 0BFA ௺ TAMIL NUMBER SIGN New in 4.1 0BB6 ஶ TAMIL LETTER SHA 0BE6 ௦ TAMIL DIGIT ZERO New in 5.1 0BD0 ௐ TAMIL OM                                     தகவல்:     http://unicode.org/faq/tamil.html#1