நூறு சதவிகித தேர்ச்சியா? 35 % தேர்ச்சியா? எது நல்லது?
கடையில் பொருள் வாங்கும் பொழுது கலப்படம் உள்ள குறையுள்ள ஒரு பொருளை விலை கொடுத்து வாங்குவதில்லை. அதே போல் அரைகுறையாகக் கட்டப்பட்ட வீடு அரைகுறையாகத் தைக்கப்பட்ட உடை இப்படி எதையுமே நாம் ஏற்பது இல்லை. ஆனால் ஒரு மாணவனின் கல்வித் தரத்தை நிர்ணயம் செய்ய 35 % போதும் என்கிறோம். ஆக முழுமை பெறாத கல்வித் தரத்துடன் பட்டம் பெற்று மாணவர்கள் வெளி வருகின்றனர் என்பது தானே உண்மை.
௧. எந்த ஒரு சமூக மாற்றமும் புரட்சியும் வகுப்பறைகளிலிருந்தே தோன்றும் என்பர். அத்தகைய முதன்மை நிறுவனத்தில் முழுமை பெறாத கல்வியை கற்று மாணவர்கள் குறையான தரத்துடன் வெளிவரல் நன்மையானதா?
௨. ஒரு குழந்தை ஒரு வயதிற்குள்ளாகவே பேசும் , சில குழந்தை இரண்டு வயது வரை கூட பேசாமல் இருக்கும். ஆனால் இன்று வகுப்பறைகளில் எதிர்பார்க்கப் படுவது என்ன? ஐந்து வயதிற்குள்ளாக இரு குழந்தைகளும் சம அளவில் அனைத்துத் திறனும் பெறவேண்டும், என்பதே.
௩. உடல் மன வளர்ச்சியில் ஏற்றத்தாழ்வுடன் இருக்கும் வகுப்பில் உள்ள 50 குழந்தையும் ஒரே மாதிரியான தேர்ச்சி பெற வேண்டும் என்றும் அப்படி பெறவில்லை என்றால் திறனற்ற குழந்தை என்றும் ஒதுக்கும் நிலை தமிழகக் கல்வி நிலையங்களில் காணப்படும் சாபக்கேடு.
௪. ஆகவே மாணவரின் திறன் அறியாது தரப்படும் பொதுக் கல்வி , அதிலும் குறைகளை ஏற்றுக்கொண்டது போல 35 % மட்டும் தேர்ச்சிக்குப் போதுமானது என்பது போன்ற அமைப்பு ஆகியவை கல்வியின் தரம் தாழ்துகிறதா இல்லையா என்பதை ஒவ்வொரு தனி மனிதரும் சமுதாய அக்கறையோடு சிந்திக்க வேண்டும்.
௫.நூறு சதவிகித கற்றல் திறன் தரும் பாடத்திட்டம் ... தொழில் நுட்ப உதவியுடன் மாணவரின் தரத்திர்க் கேற்ப தயாரிக்கப் பட வேண்டும்.
Comments
Post a Comment