Posts
Showing posts from February, 2012
#LCA2011 - Open Source in Education, ASHS One Year On
- Get link
- Other Apps
Part-of-Speech Tagger
- Get link
- Other Apps
Part-of-Speech Tagger : Reference: Tagset used in Penn Treebank. CC Coordinating conjunction CD Cardinal number DT Determiner EX Existential there FW Foreign word IN Preposition or subordinating conjunction JJ Adjective JJR Adjective, comparative JJS Adjective, superlative LS List item marker MD Modal NN Noun, singular or mass NP Proper noun singular NPS Proper noun plural PDT Predeterminer POS Possessive ending PP Personal pronoun PP$ Possessive pronoun RB Adverb RBR Adverb, comparative RBS Adverb, superlative RP Particle SYM Symbol TO To UH Interjection VB Verb, base form VBD Verb, past tense VBG Verb, gerund or present participle VBN Verb, past participle VBP Verb, noun-3rd person singular present VBZ Verb, 3rd person singular present WDT Wh-determiner WP Wh-pronoun WP$ Possessive wh-pronoun WRB Wh-adverb
SRM - பயிலரங்கு <பதிவுகள்- 2>
- Get link
- Other Apps
பயிலரங்கின் பின்புலம் ௧. 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் கணினி ஆய்வு செய்தும் சிறப்பான சொற்செயலி பிழைதிருத்தி தமிழில் கணினி நிரல் உருவாக்கம் என எதுவும் சிறப்பான முறையில் வெளிவரவில்லை. ௨. ஆனால் 125 நாடுகளில் தமிழ் பேசும் மக்களும் 3 நாடுகளில் அதிகாரப்பூர்வ கல்வி மொழியாகத் தமிழ் விளங்குவதும் இன்னும் சில நாடுகளில் ஆட்சி மொழியாக தமிழ் இலங்குவதும் நாம் அறிந்ததே. ௩. ஆக, தமிழ் மொழியின் நுகர்வுத்தேவையை நிறைவு செய்யும் நிலை வர வில்லை. ௪. இத்தகு நிலையில் கணினி ஆய்வாளர்களுக்கு கணினி நுட்பம் தெரிந்த அளவிற்கு தமிழின் அறிவியல் அடிப்படையிலான இலக்கண நுட்பம் தெரியவில்லை. ௫. இலக்கண நுட்பம் அறிந்த தமிழ் ஆய்வாளர்களுக்கு கணினி நுட்பம் தெரியவில்லை. ௬. இத்தகு பின்னணியில் இருவரையும் இணைத்து செயல்படுத்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது. தொடரும்......
SRM - பயிலரங்கு <செய்திகள் - 1>
- Get link
- Other Apps
20 ஜனவரியிலிருந்து 30 ஜனவரி வரை SRM பல்கலையில் முதன்முறையாக தமிழ் ஆசிரியர்கள் ஆய்வாளர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து மிகப்பெரும் பயிலரங்கம் நடத்தப் பெற்றது. இதனை ஒருங்கிணைத்தவர் SRM பல்கலைத் தமிழ்க் கணினிமொழி இயல் பேராசிரியர் இல சுந்தரம் அவர்கள். பத்து நாள் பயிலரங்கினைச் சிறப்பாகக் கட்டமைத்து வழிநடத்திச் சென்றவர் முனைவர் தெய்வ சுந்தரம் அவர்கள். தமிழ்மொழி நுட்பவியல் குறித்து 28 பேராளர்கள் 30 -க்கும் மேற்பட்ட அமர்வுகளில் கற்பித்தனர். 100 -தமிழ் ஆய்வாளர்கள் கலந்து கொண்ட இப்பயிலரங்கில் குறைந்தது முப்பது மென்பொருள் ஆய்வாளர்கலாவது உருவாக வேண்டுமென்று முனைவர் தெய்வ சுந்தரம் விருப்பம் தெரிவித்தார். 'தமிழ் ஆய்வாளர் பயிலரங்கினைச்' சிறப்பாக நடத்திக்கொள்ள ஏதுவாக துணைவேந்தர் பொன்னவைக்கோ அவர்கள் மனமுவந்து இட வசதிகளுக்கு அனுமதி வழங்கியது மிகவும் குறிப்பிடத்தக்கது. தொடரும்....
மதுரைக்கிளையின் தொடக்கவிழா கோலாகலமாக நடைபெற்றது...!!
- Get link
- Other Apps
அன்புடையீர், மதுரைக்கிளையின் தொடக்கவிழா டியூக் உணவக அரங்கில் நேற்று(04 -02 -2012 )மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. கணித்தமிழ் உறுப்பினர்கள் மாணவர்கள் பேரசிரியப்பெருமக்கள் ஆர்வலர்கள் பத்திரிக்கை நண்பர்கள் என எழுபதுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். குறிப்பாக கணிச்சங்கத் தலைவர் மா. ஆண்டோ பீட்டர், செயற்குழு உறுப்பினர்கள் திரு சுகந்தன்,திரு ஸ்ரீனிவாஸ்பார்த்தசாரதி, மதுரைக் கிளைப் பொறுப்பாளர் திரு கப்ரியல் ஆகியோர் கலந்து கொண்டனர். தலைவர் ஆண்டோபீட்டர் தமது விளக்கவுரையில் கணித்தமிழ் சங்கத்தின் நோக்கம், செயல்பாடுகள்,எதிர்காலத் திட்டங்கள் குறித்து விளக்கினார். தலைமையேற்று சிறப்பித்த மதுரை ஆட்சியர் திரு உ. சகாயம் மதுரைக்கிளைத் தொடக்க விழாவினை குத்துவிளக்கேற்றித் தொடங்கிவைத்தார். மதுரைக்கிளை செயற்குழு உறுப்பினர் திரு சுப்ரமணியின் புத்தகத்தை வெளியிட்டு மதுரை கணித்தமிழ் உறுப்பினர் திரு ஜனார்த்தனன் 'டிக் சாப்ட்' நிறுவனரின் மாணவர்களுக்கான இணையதளத்தினையும் ஆட்சியர் தொடங்கிவைத்தார். தலைமையுரையில் கணினியில் தமிழ் உட்புகுத்துவத்தின் இன்றியமையாத் தேவை, தமிழர்களின்