தமிழ் 99' எழுத்துரு மற்றும் விசைப் பலகைகையாள்வதில் தேர்ச்சி பெற்றவர் என,சான்று அளிக்கும் புதிய முறை

"தமிழ் 99 அடிப்படை தகுதியாக்கப்படும்'’
இணைய பல்கலைஇயக்குனர் நக்கீரன் பேட்டி



தமிழ் தட்டச்சுக்கு தேர்வு நடத்தி, சான்றிதழ் அளிப்பதுபோல், தமிழ் கணினியில் "தமிழ் 99' எழுத்துரு மற்றும் விசைப் பலகைகையாள்வதில் தேர்ச்சி பெற்றவர் என,சான்று அளிக்கும் புதிய முறையை அமல்செய்ய, தமிழ் இணைய பல்கலைக் கழகம் நடவடிக்கை எடுத்து உள்ளது.
கணினி தமிழில் பொதுவான விசைப் பலகையாக, தமிழக அரசுஉருவாக்கி உள்ள "தமிழ் 99'முறையை அறிவிக்க வேண்டும் எனவலியுறுத்தி, "தினமலர்' நாளிதழில் கட்டுரைகள் வெளியிடப் பட்டன. இதை அடுத்து, எடுக்கப் பட்டநடவடிக்கைகள் குறித்து, தமிழ் இணைய பல்கலையின் இயக்குனர் நக்கீரன் அளித்த பேட்டி:"அரசுத் துறைகளில் "தமிழ் 99' விøŒப் பலகை முறையை பயன்படுத்த வேண்டும்' என, அரசாணைவெளியிட்டுள்ள நிலையிலும், "தமிழ் 99' பயன்பாடு மிகக் குறைவான அளவிலேயே உள்ளது. இதற்கு, அரசு ஊழியர்களுக்கு"தமிழ் 99' பயன்படுத்துவதில் அனுபவம் இல்லை என, எழுந்துள்ள குறைபாட்டை தொடர்ந்து, "தமிழ் 99' பயிற்சி அளிக்கும்நடவடிக்கையை எடுத்து உள்ளோம். இதற்காக, தமிழ் கணினி ஆய்வுக் கூடத்தை பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்க நடவடிக்கை எடுத்து உள்ளோம். இதன் மூலம், "தமிழ் 99' பயிற்சியை அளிக்கஉள்ளோம். தமிழ் தட்டச்சுக்கு தேர்வு நடத்தி சான்று அளிப்பது போல், "தமிழ் 99' எழுத்துருவுக்குச்சான்று அளிக்க உள்ளோம். தனியார் தட்டச்சு நிலையங்களில், "தமிழ் 99' பயற்சியை துவங்கவேண்டும் என கேட்டுக் கொண்டு உள்ளோம்.
இது தவிர, அரசுப்பணியாளர்களுக்கு "தமிழ் 99'எழுத்துருவை அறிந்திருப்பதைஅடிப்படைத் தகுதியாகக் கொண்டுவரவும் முடிவு செய்துள்ளோம். இதன் முதல்கட்டமாக, பல்கலைபணியாளர்களுக்கு "தமிழ் 99'அறிந்திருப்பதை அடிப்படைத்தகுதியாக்கி உள்ளோம். கணினி விசைப் பலகையில் ஆங்கில எழுத்துகள் மட்டுமே உள்ளன.தமிழ் எழுத்துகள் இல்லை என்ற குறையைப் போக்க, "எல்காட்' மூலம் கொள்முதல் செய்யப்படும்அனைத்து கணினிகளிலும், தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துகள் கொண்ட விசைப் பலகைகளைஅறிமுகப்படுத்த தயார் செய்யப் பட்டு உள்ளது.
மேலும், கணினி உற்பத்தியாளர்களிடம், "பேஜ்மேக்கர்', "அடோப் போட்டோஷாப்'ஆகியவற்றில் "தமிழ் 99', "யுனிக்கோடு'க்கு இடமளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டு உள்ளோம். "அடோப்போட்@டாஷாப்'பின் புதிய நிலைகளில், "தமிழ் 99', "யுனிக்கோடு'க்கு இடமளிக்கப்பட்டு உள்ளது. தமிழில் உள்ள அனைத்து எழுத்துருக்கள், விசைப் பலகைகள் அறிந்து கொள்வதற்காக, கணினிப் பூங்காவைஅமைக்க உள்ளோம். தமிழ் எழுத்துருக்கள், விசைப் பலகை அவற்றை கையாளும் முறைஆகியன, கணினிப் பூங்காவில் இருக்கும். யார் வேண்டுமானாலும் அவற்றைபயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு நக்கீரன் கூறினார்.

- நமது நிருபர் -

Comments

Popular posts from this blog

கற்றல் மற்றும் கற்பித்தலை மேம்படுத்துவதற்கான தொழில் நுட்பங்கள்!

திருக்குறளும் அரிய தகவல்களும்