தமிழக அரசின் இணையதளம் : புதிய அறிவிப்பு
முதலமைச்சர் ஜெயலலிதா 110-வது விதியின் கீழ் சட்டசபையில் வெளியிட்ட அறிக்கையில்,
’’தகவல் தொழில் நுட்பவியலில், இந்தியாவில் முன்னணியில் உள்ள மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்வதற்கு, 2002-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தகவல் தொழில்நுட்பக் கொள்கை தான் அடிப்படைக் காரணமாக விளங்குகிறது.
அரசுத் துறைகள் பல்வேறு சேவைகளை மக்களுக்கு இணையம் மூலம் வழங்கி வருகின்றன. இந்த இணைய சேவைகள் அனைத்தும் தற்போது அந்தந்தத் துறைகளின் வலைத் தளங்களின் மூலம் அளிக்கப்படுகின்றன. பல்வேறு சேவைகளுக்கான இணையதள முகவரிகளை பொதுமக்கள் நினைவில் வைத்துக் கொள்வது கடினமானது ஆகும்.
இதனைத் தீர்க்கும் வகையில், அரசின் அனைத்து சேவைகள் பற்றிய விவரங்கள் அடங்கிய சேவை விளக்கக் கோப்பகம், ஒன்று தமிழக அரசின் இணையதளத்தில் வெளியிடப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தச் சேவை விளக்கக் கோப்பகத்தில் இணையதள சேவை, இணைய தள முகவரி, சேவை தொடர்பான இணைப்புகள், உபயோகிப் போர் விளக்க வழிகாட்டி, மற்றும் சேவையின் நிலை, குறித்த தகவல் போன்ற விவரங்கள் இடம்பெறும். இதன் மூலம் பொதுமக்கள் அரசின் சேவைகளை பெற அரசு அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய தேவை பெருமளவில் குறையும்.
இதே போன்று, அரசின் திட்டங்கள் மக்களை விரைவில் சென்றடைய, திட்டங்களின் செயல்பாட்டினை காலமுறை அடிப்படையில் கண்காணித்து ஆய்வு செய்வது அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு, ஒரு புதிய கண்காணிப்பு மென்பொருள், உருவாக்கப்படும்.
இதன் மூலம், திட்டங்களின் செயல்பாடுகளை அதிகாரிகள் எந்நேரமும் இணையம் மூலமாக கண்காணிக்கவும், அதன் அடிப்படையில் தக்க முடிவுகளை மேற்கொள்ளவும் இயலும். அரசின் செயல்பாடுகள் இணைய பொது தளங்களில் அளிக்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் பயன்பாட்டிற்காக உள்ள அரசு இணையதளங்கள் மற்றும் மென்பொருட்களில் ஏதேனும் பாதுகாப்பு குறைபாடு இருப்பின் அதனைப்பயன்படுத்தி இணைய வழி ஊடுருவிகள், இணையதளங்களை உருக்குலைத்து முக்கியமான தகவல்களை களவாடிச் செல்ல வாய்ப்பு உள்ளது.
முக்கியத்துவம் வாய்ந்த அரசு தகவல் தொழில்நுட்ப கட்ட மைப்புகளில் இத்தகைய இடையூறு ஏற்படும் போது, பொது மக்களுக்கும் அரசு அளித்து வரும் சேவைகளுக்கும் பெருமளவில் பாதிப்பு ஏற்படும்.
இத்தகைய தாக்குதல்கள் மற்றும் பாதிப்புகளிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வண்ணம் அரசுத் துறைகளின் இணைய தளங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப மென் பொருட்களை சம்பந்தப்பட்ட துறைகள் படிப்படியாக பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்
மா. ஆண்டோ பீட்டர் / M.Anto Peter
இயக்குநர் / Director
சாப்ஃட்வியூ / Softview
118, நெல்சன் மாணிக்கம் சாலை / 118. Nelson Manickam Road
சென்னை - 600 029 / Chennai -600029
தொலைபேசி / Tel: +91-44-42113535
வலைப்பூ / Blog: antopeter.blogspot.com
யூஆர்எல் / Url: www.softview.in

Comments
Post a Comment