தமிழ் டிஜிட்டல் நூலக திட்டம்:ஏழு ஆண்டுகளாக கிடப்பில் கணினி தமிழ்

கடந்த 2005ம் ஆண்டு, முதல்வர் ஜெயலலிதாஅறிவித்த தமிழ் டிஜிட்டல் நூலக திட்டம், ஏழு ஆண்டுகளாகியும், இன்னும்கிடப்பிலேயே உள்ளது. இதற்கு உதவ பல தரப்பினர் முன்வந்தும், டிஜிட்டல் நூலகத்தைஉருவாக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. டிஜிட்டல் நூலகத்திற்கான விரிவானதிட்டத்தை, ஓய்வுபெற்ற நூலகரும், "அன்பு பாலம்' அமைப்பின்நிறுவனருமான கல்யாணசுந்தரம்,கடந்த 2003ம் ஆண்டு அரசிடம் கொடுத்தார்.
பரிசீலனை : இது குறித்து, கல்யாணசுந்தரம்கூறுகையில், ""கடந்த 2003ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய, முன்னாள் ஜனாதிபதிஅப்துல் கலாம், தமிழை சர்வதேச மொழியாக்க வேண்டுமானால், உலகத்தின்அனைத்துத் தகவல்களையும், கணினி தமிழுக்கு மாற்ற வேண்டும் என, குறிப்பிட்டார். கலாமின் இந்தவேண்டுகோள் என்னை பெரிதும் ஈர்த்தது,'' என்றார்.
மேலும், ""தமிழை கணினிமொழியாக மாற்ற, டிஜிட்டல் நூலகத்தை உருவாக்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பல அரசு துறை அதிகாரிகளையும், தொழில் அதிபர்களையும் அணுகினேன்,'' என்றார்.
இந்த முயற்சிகளை அடுத்து, 2005ம் ஆண்டு, இதற்கான அறிவிப்பைமுதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். அதோடு, தொடக்க கட்ட பணிகளுக்கு, ஏழு லட்சம்ரூபாயையும் ஒதுக்கினார். இதன்பின், 2006ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால், இந்த திட்டம்கைவிடப்பட்டது. இது குறித்து,கல்யாணசுந்தரம் கூறுகையில், ""முந்தைய அரசின் திட்டங்கள் வழக்கம்போல் கைவிடப்பட்டன. டிஜிட்டல்நூலகத்துக்காக, அரசுடமை ஆக்கப்பட்ட முன்னாள் சபாநாயகர் ஆதித்தனாரின் வீட்டை கிளைநூலகத்துக்கு அளித்து விட்டனர்,''என்றார்.
14 மாதங்கள் : மேலும், ""அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், நீங்கள் அறிவித்ததமிழ் டிஜிட்டல் நூலகத் திட்டத்துக்கு புத்துயிர் கொடுத்து மீண்டும்செயல்பாட்டுக்கு கொண்டு வாருங்கள் என கோரிக்கை விடுத்து வருகிறேன்,'' என்றார்.அ.தி.மு.க., ஆட்சி அமைந்து 14மாதங்களாகியும், இந்த திட்டம் குறித்துஎந்த நடவடிக்கையும் எடுக்கப் பட்டதாக தெரியவில்லை. தமிழக தகவல் தொழில்நுட்ப துறைசார்பில், இந்த திட்டத்திற்கான பணியை எப்படி செய்யலாம் என, சில பரிந்துரைகளைஅரசுக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
அதில், தமிழ் இணைய கல்வி கழகத்தை, முழுமையானபல்கலையாக விரிவுபடுத்தி, அதன்மூலம் டிஜிட்டல் நூலகத்தை உருவாக்கலாம்; அல்லது, உயர்கல்வி துறை, தகவல் தொழில்நுட்பதுறை ஆகியவற்றின் கீழ், புதிதாக ஒரு நிறுவனத்தை உருவக்கி செயல்படுத்தலாம்; அல்லது, தகுதியுள்ள தனியார்நிறுவனங்களை கண்டறிந்து, அவற்றின் மூலம் நிறைவேற்றலாம் என, குறிப்பிடப் பட்டு உள்ளதாக, கல்யாணசுந்தரம்தெரிவித்தார்.
எப்போது? : இது போல, பல திட்டங்களுக்குபல பரிந்துரைகள் அரசுக்கு செல்கின்றன. தற்போது, வைக்கப்பட்டு உள்ளவை தொடக்க நிலைபரிந்துரைகளாகவே உள்ளன. இதனால்,அரசு இந்த திட்டத்தில் முனைப்புகாட்டவில்லையோ என, கணினி தமிழ் ஆர்வலர்கள் இடையே சந்தேகம் எழுந்து உள்ளது. முதல்வரின்இந்த திட்டம் நிறைவேற்றப் பட்டால் தான், கணினி தமிழின் வளர்ச்சியில் இன்னும்ஒரு மைல் கல்லை தாண்ட முடியும்.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=523251


Posted By-  N Deiva Sundaram

Comments

Popular posts from this blog

கற்றல் மற்றும் கற்பித்தலை மேம்படுத்துவதற்கான தொழில் நுட்பங்கள்!

திருக்குறளும் அரிய தகவல்களும்