Posts

Showing posts from August, 2021

படம்பார்த்து விடை சொல்லு

Image
  1. படத்தில் பார்க்கின்ற பண்டிகை என்ன பண்டிகை? 2. இந்தப் பண்டிகயை யார் கொண்டாடுவார்கள்? 3. இப்பண்டிகைக் கொண்டாடப்படும் காரணம் என்ன?

அமைப்புச் சொற்கள் (2)

Image
        ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனி கணினி. கணினியிலேயே பாடங்கள் படிக்கவேண்டும். கணினியிலேயே வீட்டுப்பாடம் செய்து ஆசிரியரிடம் ______________ வேண்டும். இம்மாணவர்கள் எழுதுவது, வரைவது என எல்லாமே கணினியில்தான். ' எதிர்காலப் பள்ளித்திட்டத்தின் ' கீழ் உருவான பீக்கன் தொடக்கப்பள்ளியில்தான் இந்தப் புதுமை நடைபெறுகிறது.      இந்தப் பள்ளியில் தொழில்நுட்ப சாதனங்களின் ______________ பாடம் கற்பிக்கப்படுகிறது. தொடக்கநிலை ஒன்றாம் வகுப்பு முதலே   ______________ கணினி போன்ற தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்துகிறார்கள். அதன் மூலம் பாடம் ______________ கற்றுக் கொள்கிறார்கள். இந்தப் பள்ளி தொடங்கி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் இப்பள்ளியின் தொடக்கவிழா சமீபத்தில்தான் நடைபெற்றது. இந்தத் தொடக்கவிழாவில் இடம்பெற்ற நிகழ்ச்சிகள்  ' எங்கள் பயணம், எங்கள் உலகம் ' ______________ கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்டன. இந்த வகையில் இப்பள்ளி மாணவ மாணவிகள் மற்ற பள்ளிகளுக்கு முன்னுதாரணமாக விளங்குகின்றனர்.         ...

அமைப்புச் சொற்கள் (1)

Image
  நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். எனவே நோயின்றி வாழ வேண்டுமானால் நம் உடலை நாம் நல்லமுறையில்  _______________ வரவேண்டும். நாம் உண்ணும் உணவில் உடல் வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணமான மாவுச்சத்து , புரதம் , வைட்டமின் _______________ ஊட்டச்சத்துப் பொருள்கள் இருக்க வேண்டும். ஒருவர் ஒரு நாளைக்கு எட்டுக் குவளை தண்ணீர் குடிக்க வேண்டும். காப்பியும் , தேநீரும் அதிகமாகக் குடிப்பது உடலுக்குக் கெடுதல் விளைவிக்கும் என்பதால் அளவுடன் அவற்றை அருந்துவது நல்லது.         உடற்பயிற்சியும் சுத்தமான காற்றும் உடலுக்கு இன்றியமையாதவை. வாரத்தில் ஐந்து நாட்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். நாள்தோறும் போதுமான அளவு _______________   வேண்டும். உட்காரும்போதும் நிற்கும்போதும் தலையும் முதுகும் _______________ இருக்க வேண்டும். அப்பொழுதுதான் சுவாசம் ஒழுங்காக நடைபெறும். கண் நம் உடலில் மிகச் சிறந்த உறுப்பாகும். அவ்வப்போது கண்களை மூடிக் கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். அடிக்கடி கவலைப்படுவதும் _______________ உடல்நலனைப் பாதிக்கும். எனவே , எப்பொழுதும் மகிழ்ச்சியுடனும் சிரிப்புடனும...

ந – ண – ன – வேறுபாட்டுப் பயிற்சி - 1

  ந – ண – ன – வேறுபாட்டுப் பயிற்சி - 1 ஆரோக்கியமா __ அசைவ உ __ வு என்றால் அதில் மீ __ ற்கு  முதலிடம் உ __ டு. மீ __ ன் சுவைக்கு __ ம் __ க்கு அடிமைதா __ . சுவைக்காக மட்டுமல்லாமல் , அந்த மீ __ நாம் உ __ வாக உட்கொ __ ட பி __ பு குறை __ த நேரத்தில் , எளிதில் ஜீர __ மாகி , ரத்தத்தில் கலந்து உடலுக்கு தேவையா __ சத்துக்களை தந்துவிடுகிறது. __ ம் உடலிற்கு ஆரோக்கியம் தரும் இந்த மீ __ சாப்பிட்டால் நல்லது எ __ பதை நம் குழந்தைகளுக்குச் சொல்லி வள __ க்கி __ றோம். ஆ __ ல் அந்த மீ __ ல் என் __ ன்ன சத்துக்கள் இருக்கி __ றன எ __ பதை குழ __ தைகளுக்கு சொல்கிறோமா ? மீனி __ ல் என் __ ன்ன நோய்கள் கு __ ப் படுத்தபடுகிறது என்று அறிந்திருக்கி __ றோமா ? சி __ தித்துப் பார்த்தால் , சிலருக்கு தெரியாது என்றுதா __ கூறுவோம். அளவில்லா சுவையையும் , அளவில்லா சத்துக்களையும் உள்ளடக்கிய இ __ த மீ __ ன் பய __ கள் எ __ ன எ __ பதைப் பற்றி இ __ தப் பதிவில் சற்று விரிவாகக் காண்போம்.

உரையாடல்- கடைத்தொகுதி

Image
வாடிக்கையாளர்: ஐயா! சீரகச் சம்பா அரிசி இருக்கிறதா? விற்பனையாளர்: _______________________________________. எத்தனை கிலோ வேண்டும். வாடிக்கையாளர்: ஒரு கிலோ கொடுங்கள். செக்கில் ஆட்டிய நல்லெண்ணெயும் கொடுங்கள். விற்பனையாளர்: -____________________________. வேறு ஏதேனும்? வாடிக்கையாளர்: -______________________________________ விற்பனையாள்ர்: என்னிடம் சில்லறை இருக்கிறது. கொடுங்கள். வாடிக்கையாளர்: இந்தாருங்கள். மிக்க நன்றி.

Designing Productive Group Work

Image
 

பாடக்குறிப்பு-திட்டமிடல்

உங்கள் பாடக் குறிப்பை உருவாக்குவதற்கான படிகள் 1. குறிக்கோள்களை அடையாளம் காணவும். 2. உங்கள் மாணவர்களின் தேவைகளைத் தீர்மானித்தல். 3. உங்கள் வளங்களையும் பொருட்களையும் திட்டமிடுங்கள். 4. உங்கள் மாணவர்களை ஈடுபடுத்தும் நடவடிக்கைகளைத் திட்டமிடுங்கள். 5. தகவலை அறிவுறுத்தி வழங்கும் படிநிலையைத் திட்டமிடுங்கள். 6. மாணவர் பயிற்சிக்கு நேரத்தைத் தீர்மானியுங்கள். 7. பாடத்தின் முடிவுப் பகுதி. 8. கற்றலை    மதிப்பிடுங்கள்.  

சொற்புணர்ச்சி 1 - பிரித்து எழுதுக

  சொற்புணர்ச்சி 1 பிரித்து எழுதுக 1.    நாடோறும்               = _____________________ + _____________________ 2.    விடியற்காலை             = _____________________ + _____________________ 3.    இவ்வெழுத்து            = _____________________ + _____________________ 4.    நாட்டுப்பாடல்             = _____________________ + _____________________ 5.    முப்பால்                 = _____________________ + _____________________ 6.    முதற்படி                 = _____________________ + _____________________ 7.    கனவுலகு   ...

தெரிவுவிடைக் கருத்தறிதல் (MCQ)

Image
    உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்குக் கைத்தொலைபேசிகள் பயன்படுகின்றன. பல நன்மைகளுக்காகவும் வசதிகளுக்காகவும் பலர் இவற்றைப் பயன்படுத்தினாலும் இவற்றினால் இருமடங்கு தீமைகளும் உள்ளன என்பதை நாம் மறக்கக் கூடாது. தீமைகளுள் முக்கியமானது இதன் கதிர்வீச்சினால் நம் மூளை செயல் இழக்கும் மிகப் பெரிய அபாயம் உள்ளது. ஒரு நாளைக்கு முப்பது நிமிடங்களுக்கு மேல் இதை உபயோகிப்பவர்களுக்கு இந்த அபாயம் உருவாகும் சூழல் அதிகமாகக் காணப்படுகிறது. ஆகவே நாம் கைத்தொலைபேசி உபயோகிப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். கைத்தொலைபேசி என்பது முக்கியத் தகவல்களை மட்டும் பரிமாறிக் கொள்ளும் சாதனமாக இருக்க வேண்டுமே தவிர , அது உபயோகிப்பவர்களுக்கு வேதனை தரும் வகையில் இருக்கக் கூடாது. இந்த அவசர யுகத்தில் பெரும்பாலானவர்கள் கைத்தொலைபேசியில் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டுவதால் விபத்தில் சிக்க நேரிடுகிறது. விபத்தைத் தவிர்க்க வேண்டுமென்றால் , வாகனத்தைச் சாலையோரத்தில் சிறிது நேரம் நிறுத்திவிட்டுப் பேசலாம். எனினும் மற்ற வாகனமோட்டிகளைக் கருத்தில் கொண்டு வாகனத்தை ஓட்டும்போது அதைப் பயன்படுத்துவதைக் காட்...

மரபுத்தொடர்கள், இணைமொழிகள்

  பொருத்தமான சொற்றொடரைத் தேர்ந்தெடுத்து அதன் எண்ணை மட்டும்  எழுதவும் .   Q1. ஒரு தொழிலைத் தொடங்குவதற்கு முன் அதைப்பற்றி ____(    )____ சிந்தித்துச்               செயல்பட்டால் அதில் நிச்சயம் வெற்றி பெறலாம் .   Q2. விவாதப்போட்டியில் தம் கருத்தை ____(    )____ எடுத்துக்கூறியவருக்கு சிறந்த      பேச்சாளருக்கான விருது கிடைத்தது .   Q3. இன்றும் நம்மில் பலர் காலத்துக்குப் பொருந்தாத சில பழக்க வழக்கங்களை     ____(    )____ பின்பற்றி வருகின்றனர் .          Q4. குற்றச் செயல்களைத் குறைக்க விரும்பினால் ____(    )____ ஒரு நாட்டில்     கடுமையாக இருக்க வேண்டும் .       Q 5. பெற்றோர் தங்களின் நலனுக்காகவே   ____(    )____ உழைக்கிறார்கள் என்பதைப்       பிள்ளைகள் உணரவேண்டும் .   ...