தெரிவுவிடைக் கருத்தறிதல் (MCQ)

  


உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்குக் கைத்தொலைபேசிகள் பயன்படுகின்றன. பல நன்மைகளுக்காகவும் வசதிகளுக்காகவும் பலர் இவற்றைப் பயன்படுத்தினாலும் இவற்றினால் இருமடங்கு தீமைகளும் உள்ளன என்பதை நாம் மறக்கக் கூடாது. தீமைகளுள் முக்கியமானது இதன் கதிர்வீச்சினால் நம் மூளை செயல் இழக்கும் மிகப் பெரிய அபாயம் உள்ளது. ஒரு நாளைக்கு முப்பது நிமிடங்களுக்கு மேல் இதை உபயோகிப்பவர்களுக்கு இந்த அபாயம் உருவாகும் சூழல் அதிகமாகக் காணப்படுகிறது. ஆகவே நாம் கைத்தொலைபேசி உபயோகிப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

கைத்தொலைபேசி என்பது முக்கியத் தகவல்களை மட்டும் பரிமாறிக் கொள்ளும் சாதனமாக இருக்க வேண்டுமே தவிர, அது உபயோகிப்பவர்களுக்கு வேதனை தரும் வகையில் இருக்கக் கூடாது. இந்த அவசர யுகத்தில் பெரும்பாலானவர்கள் கைத்தொலைபேசியில் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டுவதால் விபத்தில் சிக்க நேரிடுகிறது. விபத்தைத் தவிர்க்க வேண்டுமென்றால், வாகனத்தைச் சாலையோரத்தில் சிறிது நேரம் நிறுத்திவிட்டுப் பேசலாம். எனினும் மற்ற வாகனமோட்டிகளைக் கருத்தில் கொண்டு வாகனத்தை ஓட்டும்போது அதைப் பயன்படுத்துவதைக் காட்டிலும் பயன்படுத்தாமல் இருப்பதே அறிவுடைமையாகும்.

 

வினாக்கள்

Q1.   கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணம் என்ன?

1.   உலகின் எல்லா மூலைகளிலும் இருந்து தகவல்களைப் பெறுவதே

2.   கைத்தொலைபேசிகளில் உள்ள வசதிகளே

3.   கைத்தொலைபேசிகளைப் பரிமாறிக் கொள்வதே

4.   கைத்தொலைபேசிகளிலுள்ள தீமைகளை உணர்ந்ததே            (    )

 

Q2. கைத்தொலைபேசியை அதிகம் பயன்படுத்துவதால் ஒருவருக்கு எத்தகைய           பாதிப்பு ஏற்படுகிறது?

1.   சுயநினைவு பாதிக்கப்படுகிறது

2.   அபாயத்தை உருவாக்குகிறது

3.   கதிர்வீச்சு ஏற்படுகிறது

4.   மூளையை இழக்கிறது                                       (    )

 

Q3.   வாகனமோட்டும்போது விபத்தில் மாட்டிக் கொள்ளாமலிருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

1.   முக்கியத் தகவல்களை மட்டுமே பரிமாறிக் கொள்ள வேண்டும்

2.   அவசர யுகத்தில் வாழ்வதைத் தவிர்க்க வேண்டும்

3.   வாகனமோட்டும்போது கைத்தொலையில் பேசுவதைக் குறைக்க வேண்டும்

4.   வாகனமோட்டும்போது கைத்தொலைபேசியில் பேசுவதைத் தவிர்க்க     

வேண்டும்                                                 (    )

Comments

Popular posts from this blog

கற்றல் மற்றும் கற்பித்தலை மேம்படுத்துவதற்கான தொழில் நுட்பங்கள்!

திருக்குறளும் அரிய தகவல்களும்