மரபுத்தொடர்கள், இணைமொழிகள்
பொருத்தமான சொற்றொடரைத் தேர்ந்தெடுத்து அதன் எண்ணை மட்டும் எழுதவும்.
Q1. ஒரு தொழிலைத்
தொடங்குவதற்கு முன் அதைப்பற்றி____( )____ சிந்தித்துச்
செயல்பட்டால் அதில் நிச்சயம் வெற்றி பெறலாம்.
Q2. விவாதப்போட்டியில் தம் கருத்தை ____( )____எடுத்துக்கூறியவருக்கு சிறந்த
பேச்சாளருக்கான விருது கிடைத்தது.
Q3. இன்றும் நம்மில் பலர்
காலத்துக்குப் பொருந்தாத சில பழக்க வழக்கங்களை
____( )____ பின்பற்றி வருகின்றனர்.
Q4. குற்றச் செயல்களைத்
குறைக்க விரும்பினால் ____( )____ ஒரு நாட்டில்
கடுமையாக இருக்க வேண்டும்.
Q5. பெற்றோர் தங்களின் நலனுக்காகவே ____( )____உழைக்கிறார்கள் என்பதைப்
பிள்ளைகள் உணரவேண்டும்.
(1) கண்மூடித்தனமாக (2) அல்லும் பகலுமாய்
(3) ஆறவமர (4) ஓய்வு ஒழிச்சலின்றி
(5) சட்ட திட்டங்கள் (6) தலையிடுதல்
(7) தட்டிக்கேட்டல் (8) ஆணித்தரமாக
(9) உற்றார் உறவினருடன் (10) சீரும் சிறப்புமாக
Comments
Post a Comment