அமைப்புச் சொற்கள் (2)
ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனி கணினி. கணினியிலேயே பாடங்கள் படிக்கவேண்டும். கணினியிலேயே வீட்டுப்பாடம் செய்து ஆசிரியரிடம் ______________ வேண்டும். இம்மாணவர்கள் எழுதுவது, வரைவது என எல்லாமே கணினியில்தான். 'எதிர்காலப் பள்ளித்திட்டத்தின்' கீழ் உருவான பீக்கன் தொடக்கப்பள்ளியில்தான் இந்தப் புதுமை நடைபெறுகிறது.
இந்தப் பள்ளியில் தொழில்நுட்ப சாதனங்களின் ______________ பாடம் கற்பிக்கப்படுகிறது. தொடக்கநிலை ஒன்றாம் வகுப்பு முதலே ______________ கணினி போன்ற தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்துகிறார்கள். அதன் மூலம் பாடம் ______________ கற்றுக் கொள்கிறார்கள். இந்தப் பள்ளி தொடங்கி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் இப்பள்ளியின் தொடக்கவிழா சமீபத்தில்தான் நடைபெற்றது. இந்தத் தொடக்கவிழாவில் இடம்பெற்ற நிகழ்ச்சிகள் 'எங்கள் பயணம், எங்கள் உலகம்' ______________ கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்டன. இந்த வகையில் இப்பள்ளி மாணவ மாணவிகள் மற்ற பள்ளிகளுக்கு முன்னுதாரணமாக விளங்குகின்றனர்.
1. பயன்படுத்தி 6. ஆசிரியர்கள்
2. வழி 7. படிக்கவும்
3. என்னும் 8. சமர்ப்பிக்க
4. காட்ட 9. படிக்க
5. மாணவர்கள் 10. என்று
Comments
Post a Comment