அமைப்புச் சொற்கள் (1)
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். எனவே நோயின்றி வாழ வேண்டுமானால் நம் உடலை நாம் நல்லமுறையில் _______________ வரவேண்டும். நாம் உண்ணும் உணவில் உடல் வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணமான மாவுச்சத்து, புரதம், வைட்டமின் _______________ ஊட்டச்சத்துப் பொருள்கள் இருக்க வேண்டும். ஒருவர் ஒரு நாளைக்கு எட்டுக் குவளை தண்ணீர் குடிக்க வேண்டும். காப்பியும், தேநீரும் அதிகமாகக் குடிப்பது உடலுக்குக் கெடுதல் விளைவிக்கும் என்பதால் அளவுடன் அவற்றை அருந்துவது நல்லது.
உடற்பயிற்சியும் சுத்தமான காற்றும் உடலுக்கு இன்றியமையாதவை. வாரத்தில் ஐந்து நாட்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். நாள்தோறும் போதுமான அளவு _______________ வேண்டும். உட்காரும்போதும் நிற்கும்போதும் தலையும் முதுகும் _______________ இருக்க வேண்டும். அப்பொழுதுதான் சுவாசம் ஒழுங்காக நடைபெறும். கண் நம் உடலில் மிகச் சிறந்த உறுப்பாகும். அவ்வப்போது கண்களை மூடிக் கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். அடிக்கடி கவலைப்படுவதும் _______________ உடல்நலனைப் பாதிக்கும். எனவே, எப்பொழுதும் மகிழ்ச்சியுடனும் சிரிப்புடனும் இருந்து நீண்ட நாள் வாழ்வோம்.
(1) உயர்ந்தே (6) குளிக்க
(2) முதலானவற்றை (7) பாதுகாத்து
(3)
ஆகிய (8) துன்பப்படுவதும்
(4) பார்த்துக்கொள்ள (9)
நிமிர்ந்தே
(5) அச்சப்படுவதும் (10) தூங்க
Comments
Post a Comment