SRM - பயிலரங்கு <செய்திகள் - 1>
20 ஜனவரியிலிருந்து 30 ஜனவரி வரை SRM பல்கலையில் முதன்முறையாக தமிழ் ஆசிரியர்கள் ஆய்வாளர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து மிகப்பெரும் பயிலரங்கம் நடத்தப் பெற்றது. இதனை ஒருங்கிணைத்தவர் SRM பல்கலைத் தமிழ்க் கணினிமொழி இயல் பேராசிரியர் இல சுந்தரம் அவர்கள். பத்து நாள் பயிலரங்கினைச் சிறப்பாகக் கட்டமைத்து வழிநடத்திச் சென்றவர் முனைவர் தெய்வ சுந்தரம் அவர்கள். தமிழ்மொழி நுட்பவியல் குறித்து 28 பேராளர்கள் 30 -க்கும் மேற்பட்ட அமர்வுகளில் கற்பித்தனர். 100 -தமிழ் ஆய்வாளர்கள் கலந்து கொண்ட இப்பயிலரங்கில் குறைந்தது முப்பது மென்பொருள் ஆய்வாளர்கலாவது உருவாக வேண்டுமென்று முனைவர் தெய்வ சுந்தரம் விருப்பம் தெரிவித்தார்.
'தமிழ் ஆய்வாளர் பயிலரங்கினைச்' சிறப்பாக நடத்திக்கொள்ள ஏதுவாக துணைவேந்தர் பொன்னவைக்கோ அவர்கள் மனமுவந்து இட வசதிகளுக்கு அனுமதி வழங்கியது மிகவும் குறிப்பிடத்தக்கது.
தொடரும்....
Comments
Post a Comment