சுருக்கி எழுதுக
கீக்காணும் பனுவலைப் படித்துவிட்டு உன் சொந்த நடையில் சுருக்கி எழுதுக
துடிப்பான முதுமைக்காலத்தைக் கொண்டாடிய
மூத்தோர்
விளையாட்டு தினம்
துடிப்பான
முதுமைக்காலத்தை ஊக்குவிக்கவும் பல தலைமுறையினரை ஒரே கூரையின்கீழ் கொண்டு வரவும்
வருடாந்திர விளையாட்டு தினத்தை இம்மாதம் 4ஆம் தேதியன்று
‘சன்லவ்’ அமைப்பு கொண்டாடியது. சன்லவ்’ நிர்வாகத்தினர்
ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில்,
300க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் கலந்துகொண்டனர்.
பலதுறைத்
தொழிற்கல்லூரி மாணவர்கள் வழிநடத்திய விளையாட்டுகளில் மூத்தோர் பங்கேற்று
மகிழ்ந்தனர். ‘தலைசிறந்த உற்சாகமூட்டும் குழு’ என்ற போட்டியிலும் ஆர்வத்துடன்
கலந்துகொண்டு தங்கள் திறமையைக் காட்டினர். தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடு
படுவதுடன் சிறந்த உடல் ஆரோக்கியத்தைப் பெறவும் அதில் அடங்கியுள்ள இன்பத்தை உணரவும்
இதுபோன்ற நிகழ்வுகள் உதவும் என்று
‘சன்லவ்’ அமைப்பின் தலைமைத் திட்ட அதிகாரி திரு ஸ்ரீ ராஜமோகன் தெரிவித்தார்.
https://www.tamilmurasu.com.sg/community/story20191013-34988.html
ஒரு அமைப்பு முதியோருக்காக விளையாட்டு தினத்தை நடத்தியது. பல அமைப்புகள் உதவின. இந்த நிகழ்வு வயதானவர்களுக்கும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவியது
ReplyDelete-irfan
Delete‘சன்லவ்’ அமைப்பு முதியோர்களுக்கான விளையாட்டு தினத்தை ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த்தார்கள். அதில் ௩௦௦க்கும் மேற்பட்ட முதியோர்கள் குழுக்களாக சேர்ந்து பங்கேற்றார்கள். உடற்பயிற்சிச் செய்வதால் ஏற்படும் நன்மைகளையும் மகிழ்ச்சியையும் முதியோர்களுக்கு உணர்த்துவதற்கே இந்த நிகழ்ச்சி ஏற்பாடுச் செய்யப்பட்டதாக கூறினார், ‘சன்லவ்’ அமைப்பின் தலைமைத் திட்ட அதிகாரி திரு ஸ்ரீ ராஜமோகன்.
ReplyDeletereshmen
Deleteஇந்த மாதத்தின் 4 வது நாளில், சூரிய காதல் ஆண்டுதோறும் விளையாட்டு தினத்தை கொண்டாடியது, ஆரோக்கியமான பழைய வாழ்க்கையை மேம்படுத்துவதோடு பல தலைமுறை மக்களை ஒரே இடத்தில் சேகரித்தது. பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடு செய்த விளையாட்டுகளில் மக்கள் பங்கேற்று மகிழ்ந்தனர். வயதானவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் ஆர்வத்துடன் பங்கேற்றனர், மேலும் சிறந்த ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியை உறுதி செய்தனர்.
ReplyDelete~ அமிஷ் குருவ்
300 வயதானவர்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கான ஒரு நிகழ்வு அது ஒரு அமைப்பால் நடத்தப்படுகிறது. வயதானவர்கள் அதை ரசித்தனர்
ReplyDelete‘சன்லவ்’ அமைப்பு முதியோர்களுக்கான விளையாட்டு தினத்தை ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த்தார்கள். அதில் ௩௦௦க்கும் மேற்பட்ட முதியோர்கள் குழுக்களாக சேர்ந்து பங்கேற்றார்கள். உடற்பயிற்சிச் செய்வதால் ஏற்படும் நன்மைகளையும் மகிழ்ச்சியையும் முதியோர்களுக்கு உணர்த்துவதற்கே இந்த நிகழ்ச்சி ஏற்பாடுச் செய்யப்பட்டதாக கூறினார், ‘சன்லவ்’ அமைப்பின் தலைமைத் திட்ட அதிகாரி திரு ஸ்ரீ ராஜமோகன்.
ReplyDelete-கு. ஜனனி
ReplyDeleteதுடிப்பான முதுமைக்காலத்தைக் கொண்டாடிய மூத்தோர் விளையாட்டு தினம்.விளையாட்டு தினத்தை இம்மாதம் 4ஆம் தேதியன்று ‘சன்லவ்’ அமைப்பு கொண்டாடியது. இந்நிகழ்வில், 300க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் கலந்துகொண்டனர். சிறந்த உடல் ஆரோக்கியத்தைப் பெறவும் அதில் அடங்கியுள்ள இன்பத்தை உணரவும் இதுபோன்ற நிகழ்வுகள் உதவும் என்று ‘சன்லவ்’ அமைப்பின் தலைமைத் திட்ட அதிகாரி திரு ஸ்ரீ ராஜமோகன் தெரிவித்தார் - najmina
துடிப்பான முதுமைக்காலத்தை ஊக்குவிக்கவும் பல தலைமுறையினரை ஒரே கூரையின்கீழ் கொண்டு வர, 'சன்லவ்’ அமைப்பும், ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியும் சேர்ந்து, வாராந்திர விளையாட்டுத்தினத்தை இம்மதன் 4அம் தேதியில் நடத்தின. அதில் கலந்து கொண்ட 300க்கும் மேற்பட்ட முதியோர்கள், உற்சாகத்துடன் மாணவர்கள் நடத்திய விளையாட்டுகளில் கலந்துகொண்டு மகிழ்ந்தனர். hema
ReplyDelete