கட்டுரை- மேற்கோள் இணைக்கும் வழிவகை
மேற்கோள்களைப் புகுத்தும் வழி
‘காற்றுள்ளபோதே
தூற்றிக்கொள்’ என்பதைப் போல இந்த நேரத்தில் நீங்கள் அவர்களிடம்,
எவ்வாறு சுறுசுறுப்புமிக்க, ஆரோக்கிய வாழ்க்கை முறையை மேற்கொள்வது என்று விளக்கினால்
கண்டிப்பாகத் திருந்திவிடுவார்கள்.
முதலில் ‘நோயற்ற வாழ்வே
குறைவற்ற செல்வம்’ என்பதைப் போல ஒரு நோயற்ற வாழ்க்கையை வாழ உடற்பயிற்சியின்
அத்தியாவசியத்தை விளக்க வேண்டும்.
‘காலம்
பொன் போன்றது, கடமை கண் போன்றது’
என்பதைப் போல நேரத்தைச் சரியான முறையில் திட்டம் செய்து ஒரு சிறிய நேரத்தை மட்டும்
கணினியைப் பயன்படுத்துவதற்காகத் தடுத்து வைக்க வேண்டும் என்பதைப் பற்றிக் கூற
வேண்டும்.
‘நோயற்ற
வாழ்வே குறைவற்ற செல்வம்’. இதைப் பதின்ம வயதினர் உணர்ந்து செயல்பட வேண்டும்.
‘தொட்டில்
பழக்கம் சுடுகாடு மட்டும்’ என்பதை நினைவில் கொண்டு பதின்ம வயதினர் நல்ல பழக்கங்களை
வளர்க்க வேண்டும்.
‘ஐந்திலே
வளையாயது ஐம்பதில் வளையுமா?’ என்பதைத்தான் இத்தருணத்தில் யோசிக்க வேண்டும்.
ஓய்வு ஒழிச்சலின்றி உழைத்து பணத்தைச் சம்பாதிக்கும்
பெற்றோர்களிடம் ‘செவிடன் காதில் ஊதிய சங்கு’
போல நடந்துகொண்டால் இளையர்கள் வாழ்க்கையில் முன்னேற மாட்டார்கள்.
Comments
Post a Comment