வாசிப்புக் கருத்தறிதல்

 வாசிப்புக் கருத்தறிதல்

 

வாசிப்பை நேசிப்போம்


 

என்..பி (NOB) உலகக்கலாசாரக் குறியீட்டு நிறுவனம், உலகளவில் அனைத்து நாட்டு மக்களிடையே நிலவும் ஊடகப்பழக்கங்கள்  குறித்து விரிவான ஓர் ஆய்வு  செய்தது. அந்த ஆய்வின்படி, புத்தகப் புழுக்களான இந்தியர்கள் ஒவ்வொருவரும் வாரத்திற்குச் சராசரி 10.7 மணிநேரம் புத்தகம் வாசிக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது. டிசம்பர் 2004 முதல் பிப்ரவரி 2005 வரையிலான காலகட்டத்தில் 13 வயதுக்கு மேற்பட்ட 30 நாடுகளைச் சேர்ந்த 30,000 பேரிடம் நடத்தபட்ட விரிவான பேட்டிகள் மூலம் இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவுகள் மதிப்பிடப்பட்டுள்ளன.

 

புத்தகம் வாசிப்பதில் தாய்லாந்து நாட்டினர் இரண்டாமிடத்திலும் சீனர்கள் மூன்றாமிடத்திலும் இருக்கின்றனர். தைவானியர் புத்தகம் வாசிப்பதில் 29-வது இடத்தைப்பெற்றுள்ளனர். வானொலி கேட்பது, தொலைக்காட்சி பார்ப்பதில் இந்தியர்கள் 22வது இடத்திலும் தைவானியர் முதலிடத்திலும் உள்ளனர். கணினி, இணையப்பயன்பாட்டில் 7.9 மணிநேரம் செலவிடும் இந்தியர்கள் 23வது இடத்தில் உள்ளனர்.   

 

 

 

வினாக்கள்

Q1   உலகிலேயே அதிக நூல்கள் வாசிப்பவர்கள் யார்?

      (A) சீனர்கள்

      (B) இந்தியர்கள்

      (C) தாய்லாந்தினர்

      (D) தைவானியர்கள்                                            (   )

 

Q2   ஆய்வுகள் எத்தனை நாடுகளில் மேற்கொள்ளப்பட்டன?

 

(A) பதின்மூன்று நாடுகளில்

(D) இருபத்து மூன்று நாடுகளில்                                  

(C) இருபத்தெட்டு நாடுகளில்

(D) முப்பது நாடுகளில்                                          (   ) 

                                         

Q3  தைவானியர்கள் எவற்றில் சிறந்து விளங்குகின்றனர்?

      (A) கணினியில்  

      (B) தொலைக்காட்சியில்

(C) கணினி,இணையத்தில்   

      (D) வானொலி,தொலைக்காட்சியில்                   

Comments

Popular posts from this blog

கற்றல் மற்றும் கற்பித்தலை மேம்படுத்துவதற்கான தொழில் நுட்பங்கள்!