கவிதை - கொலாஸ்டிக்

 கேளுங்கள் கேளுங்கள்

எங்கள் கதையைக் கேளுங்கள்

பாருங்கள் பாருங்கள் 

எங்கள் வேதனையைப் பாருங்கள்

சிந்திக்காமல் நீங்கள் செய்கிறீர்கள்

வேதனையை நாங்கள் சந்திக்கிறோம்

எங்கள் தொண்டைக்குள் விஷம்

உங்கள் அலட்சியத்தின் அவலம்

வீடடைந்தால் நிம்மதி உங்களுக்கு

ஆனால்

வீட்டிலேயே சமாதி எங்களுக்கு

நெகிழிக் குப்பையிலிருந்து எங்கள் அலறல்

உங்களுக்கு 

செவிடன் காதில் ஊதிய சங்கு

உறகுபவர் எழுவார்...

நடிப்பவர் எழுவாரோ?

நீங்கள் தூக்கி எறிவது பிளாஸ்டிக் அல்ல

எங்களைக் கொல்லும் கொலாஸ்டிக்!

கொல்+பிளாஸ்டிக் = கொலாஸ்டிக்.....

                                                                              கங்கா - உயர்நிலை 2

                                                                              தெமாசெக் பள்ளி

Comments

Popular posts from this blog

கற்றல் மற்றும் கற்பித்தலை மேம்படுத்துவதற்கான தொழில் நுட்பங்கள்!