Posts

Showing posts from September, 2015

பன்னாட்டுப் படைப்பாளர் பல்துறை எழுத்தரங்கம் - கணித்தமிழ் எழுத்தரங்கம் போட்டி அறிவிப்பு

பதின்மூவருக்குப் பரிசுகள்  பங்கேற்பாளர்களுக்குக்  கணித்தமிழ் ஆர்வலர் விருதிதழ்கள்  தமிழ்க்காப்புக்கழகமும் இலக்குவனார் இலக்கிய இணையமும் இணைந்து ‘அகரமுதல’ மின்னிதழ் மூலமாகப் பன்னாட்டுப் படைப்பாளர் பல்துறை எழுத்தரங்கத்தை நடத்த உள்ளன. ஒவ்வோர் அறிவியல் துறையிலும் பாடநூல் நோக்கில் கட்டுரைகளையும் சொல்லாக்கங்களையும் (நல்ல) தமிழில் எழுதி அனுப்ப வேண்டும். இவை ‘அகரமுதல’ மின்னிதழ்த்தளத்தில் வெளியிடப் பெறும். கருத்தாளர்கள், தத்தம் கருத்துகளை கட்டுரைகளின் பின்னூட்டாகப் பதிய வேண்டும். அதன்பின் கட்டுரையாளர்கள் ஏதும் திருத்தம் இருப்பின் குறிப்பிட வேண்டும். கட்டுரைகளும் கருத்துகளும் மின்னூலாக வெளியிடப் பெறும். பின்னர் அச்சு நூலாகவும் வெளியிடப் பெறும்.  விதிமுறைகள்:  1. முதலில் கணித்தமிழ் எழுத்தங்கம் நடைபெறும். எனவே, கணிணி தொடர்பான கட்டுரைகளை அனுப்ப வேண்டும். (பிற துறை சார்ந்த கட்டுரைகளை அனுப்ப விரும்பினால் துறையின் தலைப்பைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். அத்துறைக்கான எழுத்தரங்கம் நிகழும் பொழுது அதில் சேர்த்துக் கொள்ளப்படும்.)  2. முன்னரே பிற கருத்தரங்கங்களில் வெளிவந...

திசை தோறும் தமிழ் மணக்க - கன்னித் தமிழிலிருந்து கணினித்தமிழ்!

                  நாம் வாழும் பூமியில் ஒருவரோடு ஒருவர் கருத்தாடல் செய்ய அனைவருக்கும் ஒரு மொழி உண்டு. அவ்வாறே இந்த இணைய உலகில் நாம் உறவாட மொழி தேவை. இதில் முதன்மை நோக்கு யாதெனில் யார் யாரெல்லாம் நுட்பக் குழந்தைகளான கணினிக்கும் திறன்பேசிக்கும் அவரவர் தாய்மொழியைப் புரிய வைத்து பேச, உரையாடச் செய்கிறார்களோ அவர்களின் மொழி இணைய உலகில் கோலோச்சும்.               ஆகவே, சில நூற்றாண்டுகளே வரலாறு கொண்ட ஆங்கிலம், பிரெஞ்சு, உருசியன், சீனம், உருது, சப்பானியம் ஆகிய மொழிக்காரர்கள் தங்கள் தாய்மொழியை இந்த நுட்பக் குழந்தைகளுக்கு  அவைகளின் மொழியில்(low level language)  கற்பிப்பதற்கான மொழியை(High level Language) உருவாக்கிப் புரியவும் பேசவும் வைத்துவிட்டார்கள்.  கணினியில் திறம்பட வேலை செய்பவர்கள் எனப் பெயர்பெற்ற தமிழர்கள் பலர் ஆங்கில மொழிக்குச் சேவகம் செய்தே காலம் கழித்துவிட்டபடியால், சிலரின் முயற்சியால் சில முன்னேற்றமே இந்த இணைய உலகில் நம்மால் செய்ய முடிந்துள்ளது.   இது கணினி வரலாறு சொல்லும் உண்மை.   ...