'வாட்சிம்(WhatSim)'

ரோம்: வாட்ஸ்அப்பில் மேலும் ஒரு புதிய கண்டுபிடிப்பு இடம்பெற்றுள்ளது. அதற்கு வாட்சிம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் வாட்ஸ்அப்  ஒரு தகவல் தொடர்பு முறையாகவே மாறிவிட்டது. ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தி வரும் ஒவ்வொருவரும் வாட்ஸ்அப்பை பயன்படுத்தி வருகின்றனர். இதனை  பயன்படுத்த  இண்டர்நெட் வசதி கட்டாயமாக வேண்டும். ஆனால் தற்போது இண்டர்நெட் இல்லாமலேயே பயன்படுத்தும் வகையில் புதிய சிம்மை இத்தாலியை  சேர்ந்த மொபைல் நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது. இந்த சிம்மை பயன்படுத்தி வைபை, டேட்டா கனெக்ஷன், ரோமிங் இல்லாமல் தகவலை பரிமாறிக்  கொள்ளலாம்.

இந்த சிம்மிற்கு 'வாட்சிம்(WhatSim)' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த சிம்மை ஜீரோமொபைல் நிறுவனத்தின் இயக்குனர் மானுவேல் ஜனிலியா  கண்டுபிடித்திருக்கிறார். இந்த வாட்சிம் உலகம் முழுவதும் 150 நாடுகளில் 400க்கும் மேற்பட்ட மொபைல் ஆபரேட்டர்களுடன் இணைந்து சேவை செய்கிறது. ஒரு  நாட்டிலிருந்து வேறு நாட்டிற்கு சென்றாலும் உடனடியாக சேவை தானாகவே மாற்றிக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் தடை ஏதுமின்றி  இல்லாமல் எப்போதும் வாட்ஸ்அப்பில் இணைந்திருக்க முடியும். இதற்கு ரோமிங் கட்டணங்களும் கிடையாது.

வாட்சிமின் மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் ரூ.700 ஆகும். இதன்மூலம் வருடம் முழுவதும் உலகெங்கிலும் உள்ள நண்பர்களுடன் 'Chat' செய்ய முடியும்.  மேலும் இதற்கு  கட்டணங்கள்  ஏதும் கிடையாது. மேலும் இதற்கு எக்ஸ்பைரி தேதியும் கிடையாது.
தகவல்: http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=128666

Comments

Popular posts from this blog

கற்றல் மற்றும் கற்பித்தலை மேம்படுத்துவதற்கான தொழில் நுட்பங்கள்!

திருக்குறளும் அரிய தகவல்களும்