கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு

அன்புடையீர் ,

தமிழ் ஆர்வலர்கள் ,தமிழாசிரியர்கள் , தமிழ் பேராசிரியர்கள் , தமிழ் கூறு நல்லுலக மக்கள் , உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழ் வம்சா வழியினர் ஆகிய அனைவருக்குமான அழைப்பு மற்றும் அறிவிப்பு.

தமிழ் மொழியின் வளர்ச்சியில் அடுத்த கட்டமாகத் தொழில்நுட்பத்தில் தமிழைக் கொண்டு சேர்த்தலின் தேவை , அவசியம், நடைமுறை சிக்கல்கள் , நாம் இன்னும் கடக்க வேண்டிய தூரங்கள், ஒட்டு மொத்தத் தமிழரின் மொழிபற்றிய நிலைப்பாடு முதலிய பல செய்திகளைத் தேர்ந்து தெளிய வேண்டிய இற்றைச் சூழலில்- "கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு " நடைபெறுகி...
றது. இதில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கவும் கணித்தமிழ் அடிப்படைகள் குறித்து அறியவும் அழைக்கிறார்கள். சிறப்பாக மின்னுக்கருவிகளில் தமிழ்ப் பயன்பாடு , கணினித் தமிழ் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விளக்கப்பட உள்ளது.

இடம் : இலயோலா கல்வியியல் அரங்கம்,சென்னை.

நாள்: 16-12-12 , ஞாயிற்றுக்கிழமை
 
நேரம்: காலை 10.00 - மாலை 5.30.

அனைவரும் வருக ! கணித்தமிழ் பருக !!


Comments

Popular posts from this blog

கற்றல் மற்றும் கற்பித்தலை மேம்படுத்துவதற்கான தொழில் நுட்பங்கள்!

திருக்குறளும் அரிய தகவல்களும்