மொழிவளர்ச்சி
மொழிவளர்ச்சித்திட்டத்தில் முதலில் ஒரு மொழிக்குத் தேவையானது அதற்குரிய தகுதியை அளிப்பதேயாகும். ஆட்சிமொழி, பயிற்றுமொழி, வழிபாட்டுமொழி என்று பல தகுதிகள் அளிக்கப்படவேண்டும். இதை ஆங்கிலத்தில் Status Planning என்று அழைக்கிறார்கள்.
பின்னர் அத்தகுதிகளுக்குக்கு ஏற்பத் தன்னை வளர்த்துக்கொள்வதை Corpus Planning என்று அழைக்கிறார்கள். அதாவது அம்மொழிக்குத் தேவையான மொழிவளங்களை விரிவாக்குவதாகும். அகராதிகள், இலக்கணங்கள், நூல்கள் பெருகவேண்டும்.
மூன்றாவதாக, அம்மொழியைப் பிறருக்கும் கற்றுக்கொடுப்பதற்காக, அதை எல்லை தாண்டிப் பரப்புவதற்காக மேற்கொள்ளப்படும் Acquisition Planning . ஆங்கிலத்திற்கு பிரிட்டிஷ் கவுன்சில், ஜெர்மனுக்கு மாக்ஸ்முல்லர் பவன், பிரஞ்சுக்கு அலையன்ஸ் பிரான்ஸ் போன்று தமிழுக்கு நிறுவனங்கள் உருவாக்கப்படவேண்டும்.
அடுத்து ஒரு நிலையும் உள்ளது. Prestige Planning என்று அழைப்பார்கள். செம்மொழி போன்ற சிறப்புகள் அளிக்கப்படுவது. இவற்றையெல்லாம் தமிழுக்குச் செய்யவேண்டும் என்பதுதான் நமது கோரிக்கை
- ந. தெய்வ சுந்தரம் .
- ந. தெய்வ சுந்தரம் .
தெளிந்த சிந்தனையும் தொலைநோக்குப் பார்வையும் கொண்ட திட்டங்கள்.
ReplyDeleteமு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா
முனைவர் மு.இளங்கோவன் அவர்களின் பார்வையிடுதலுக்கும் பதிவிற்கும் நன்றி.
Delete