கட்டற்ற கணிநுட்ப ஆய்வுக் கட்டுரை போட்டி

மென்விடுதலை நாள் (Software Freedom
Day<http://en.wikipedia.org/wiki/Software_Freedom_Day>)
2012 தனை முன்னிட்டு கட்டற்ற கணிநுட்ப ஆய்வுக் கட்டுரை போட்டி ஒன்றை நடத்தத்
திட்டமிட்டுள்ளோம். விவரங்கள் பின்வருமாறு:

நோக்கம்
   -
   தமிழில் கட்டற்ற கணிநுட்பம் தொடர்பான கருத்தாழம் மிக்க படைப்புகளை கொண்டு
   வருதல்
   -
   கட்டற்ற கணிநுட்பம் தொடர்பான கோட்பாடுகள் பரவிட வகை செய்தல்

தகுதி
   -
   கணிநுட்பத்தில் ஆர்வமுடைய எவருக்கும் வாய்ப்பு

கட்டுரையின் அமைப்பு
   -
   கட்டற்ற கணிநுட்பங்களை, தகுதரங்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்க
   வேண்டும்
   -
      இருக்கும் நுட்பங்களின் அடுத்த பரிணாமமாய் அமைந்திருக்கலாம்
      -
      புதியதோர் கருத்தாக்கமாய் அமையலாம்

எதிர்பார்ப்புகள்
   -
   அனுப்பப்படும் படைப்புகளின் பதிப்புரிமம் கணியத்திற்கு வழங்கப்பட்டிருக்க
   வேண்டும். (கணியமானது http://creativecommons.org/licenses/by-sa/3.0/
உரிமத்தின்
   கீழ் வெளியிடும்.)
   -
   கட்டுரையின் ஒரு பகுதியாக,
   -
      *பதிப்புரிமம் அளிப்பு* என்ற தலைப்பிட்டு கீழ்கண்ட உறுமொழிகள்
      அளிக்கப்பட வேண்டும.
      -
         கட்டுரை கணியத்திற்காக முதன் முதலில் படைக்கப்பட்டது என்று
         உறுதியளிக்கிறேன்
         -
         கட்டுரையை படைத்ததன் மூலம் எழும் பதிப்புரிமங்களை கணியத்திற்கு
         வழங்குகிறேன்

நெறிகள்
   -
   கட்டுரை 20 பக்கங்களுக்கு (A4) மிகாமல் .odt முறையில் அளிக்கப்படவேண்டும்.
   -
   மின்னெழுத்தின் அளவு 12 பயன்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.
   -
   கட்டுரைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 15/08/2012
   -
   அனுப்பப்படவேண்டிய முகவரி: editor@kaniyam.com

கௌரவம்
   -
   சிறப்பான மூன்று கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு அக்ககட்டுரையாளருக்கு
   மென்விடுதலை நாளன்று (15/09/2012) *கணியன்* என்ற சிறப்புப் பட்டயமும்
   பரிசிலும் வழங்கப்படும்.
   -
   மேற்கொண்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வசதியாய் தேர்வு செய்யப்படும் ஏனைய
   கட்டுரைகளனைத்தும் கணியத்தில் வெளியிடப்பட்டு பராமரிக்கப்படும்.

ஆதரவாளர்கள்
   -
   இப்போட்டியை வெற்றிகரமாய் நடத்திட நேரமும் பொருளும் ஏனைய வசதிகளும் செய்து
   தர வல்ல ஆதரவாளர்கள் தேவைப் படுகிறார்கள்.
   -
   ஆர்வமிருக்கும் தனிநபர்பள் நிறுவனங்கள் nirvagi@kaniyam.com என்ற
   முகவரியில் தொடர்பு கொள்ளவும்.


--
கணியத்திற்காக,
விக்னேஷ் நந்த குமார்
இணைய பரப்புரையாளர்

Comments

Popular posts from this blog

கற்றல் மற்றும் கற்பித்தலை மேம்படுத்துவதற்கான தொழில் நுட்பங்கள்!

திருக்குறளும் அரிய தகவல்களும்