எழுதுதல் திறன் மேம்பாட்டில் – ”கணினிவழிக் குறைதீர் கற்றல் கருவி”- ச. ஜாஸ்லின் பிரிசில்டா, (ஆய்வாளர்)
முன்னுரை: ஒரு மொழியைக் கற்கும் பொழுது கற்போர் பல்வேறு காரணங்களால் பிழைசெய்வது இயற்கை. மாணவர்களின் பிழைகளை இனங்கண்டு அதனைக்களையச் செய்து மொழியினை முறையாகப்பயன்படுத்த கற்றுக்கொடுக்கவேண்டும். மாணவர்களின் பிழைகளைச்சுட்டிக் காட்டுவதாலோ அவர்களின் பிழைக்குப் பதில் சரியான மொழியமைப்பில் எழுதச்செய்த்தாலோ பிழைகள் முற்றிலும் நீக்கப்படுவதில்லை. மாறாகப் பிழைகளைத்தொகுத்து காரணம் கண்டறிந்து துல்லியமாகப் பிழை நீக்க உதவுவதே பிழை ஆய்வு ஆகும். மொழிக்கல்வி என்பது பேசுதல் எழுதுதல் வாசித்தல் கேட்டல் ஆகிய நான்கு திறன்சார் கற்றல் ஆகும். அதில் எழுதுதல் திறனில் சிறப்புப்பெற இலக்கணப் பிழையற்ற எழுதுதல் இன்றியமையாதது. பள்ளிக்கல்வி முழுமையிலும் இலக்கணக் கூறுகள் கற்றிருந்தும் கல்லூரிக்கல்வியிலும் இலக்கணப் பிழைகள் நேரும்பொழுது எழுதுதல்த் திறனைக் குறைக்கின்றது. ஆகவே , தவறுகள் நிகழும் கூறுகளில் மட்டும் குறைதீர் கற்றல் வழி பயின்றுகொண்டால் எளிதில் இலக்கணப்பிழைகளைக் களையலாம். அதனையும் கணினிவழிக் கல்வி ஏற்பாட்டில் தாமே கற்றல் அடிப்படையில் கற்பதற்குத் தேவையான குறைதீர் பயிற்சிக் கருவி வடிவமைத்தல் இன்றையத்தேவைய...