கட்டற்ற கணிநுட்ப ஆய்வுக் கட்டுரை போட்டி
மென்விடுதலை நாள் (Software Freedom Day< http://en.wikipedia.org/wiki/Software_Freedom_Day >) 2012 தனை முன்னிட்டு கட்டற்ற கணிநுட்ப ஆய்வுக் கட்டுரை போட்டி ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். விவரங்கள் பின்வருமாறு: நோக்கம் - தமிழில் கட்டற்ற கணிநுட்பம் தொடர்பான கருத்தாழம் மிக்க படைப்புகளை கொண்டு வருதல் - கட்டற்ற கணிநுட்பம் தொடர்பான கோட்பாடுகள் பரவிட வகை செய்தல் தகுதி - கணிநுட்பத்தில் ஆர்வமுடைய எவருக்கும் வாய்ப்பு கட்டுரையின் அமைப்பு - கட்டற்ற கணிநுட்பங்களை, தகுதரங்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்க வேண்டும் - இருக்கும் நுட்பங்களின் அடுத்த பரிணாமமாய் அமைந்திருக்கலாம் - புதியதோர் கருத்தாக்கமாய் அமையலாம் எதிர்பார்ப்புகள் - அனுப்பப்படும் படைப்புகளின் பதிப்புரிமம் கணியத்திற்கு வழங்கப்பட்டிருக்க ...